இரண்டு நாள் முடிவில் துணிவு படத்தின் வசூல் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார்.

இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் வெளியாகி உள்ளது.இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் முதல் நாளில் 26 கோடி வரை வசூல் செய்தது.

இந்த நிலையில் இரண்டாவது நாளில் இந்தியாவில் ரூபாய் 15 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இரண்டு நாள் முடிவில் மொத்தமாக இந்த படம் 41 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.