நடிகர் சிம்புவின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

10 Thala Movie Songs Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

சிம்புவின் அடுத்த படம்.. இரண்டு பாடல்களை முடித்த ஏ ஆர் ரகுமான் - எஸ்டிஆர் ரசிகர்களை குஷியாக்கிய தகவல்

இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்பு ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள 10 தல என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

கன்னட சினிமாவில் வெளியான மப்ஃடி படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.

பக்கா கேங்ஸ்டர் படத்தில் சிம்புவை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.