Bigil Vs Kaithi
இரண்டாம் வார வசூலில் கைதி படம் பிகில் படத்தின் வசூலை முந்தி இருப்பதாக தியேட்டர் நிர்வாகம் ஒன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வருட தீபாவளிக்கு கார்த்தியின் கைதி மற்றும் விஜயின் பிகில் என இரண்டு படங்கள் ரிலீசாகி இருந்தன. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.

முதல் வாரத்தில் சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் கைதி பிகில் படத்தின் வசூலில் நான்கில் ஒரு பங்கை கூட வசூலிக்கவில்லை.

இரண்டாவது வாரத்தில் பிகில் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி 5% அதிகமாக வசூல் செய்து இருப்பதாக அந்த தியேட்டர் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

மேலும் பிகில் படமும் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருவதாகவும் ரோகினி தியேட்டரில் சர்காருக்கு பிறகு பிகில் நல்ல வசூலை பெற்ற படமாக அமைந்திருப்பதாகவும் அவர் இன்னொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.