தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஜீ தமிழ்.

இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.

இப்படியான நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி 1000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்த சீரியல்கள் சில உள்ளன, அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. செம்பருத்தி

கார்த்திக் ராஜ், ஷபானா ஆகியோர் நடிப்பில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் தமிழ் சின்னத்திரையில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வந்தது, கார்த்திக் ராஜ் வெளியேற்றத்திற்கு பிறகு அக்கினி இந்த சீரியலில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் 1,432 எபிசோடுகள் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்தது.

  1. யாரடி நீ மோகினி

நடிகர் ஸ்ரீ, நட்சத்திரா, சைத்திரா ரெட்டி உட்பட பலர் இணைந்து நடித்த இந்த சீரியலுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்து வந்த நிலையில் இந்த சீரியல் 1,253 எபிசோடுகளை நிறைவு செய்து முடிவுக்கு வந்தது.

  1. பூவே பூச்சூடவா

தினேஷ், ரேஷ்மா உட்பட மற்றும் பலர் இணைந்து நடித்த இந்த சீரியலும் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் 1,149 எபிசோடுகள் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்தது.

  1. ரெட்டை ரோஜா

ஷிவானி நாராயணன் நடிப்பில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலில் அவரது வெளியேற்றத்துக்கு பிறகு சாந்தினி நடிக்க தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி 1,013 எபிசோடுகளுடன் நிறைவுக்கு வந்தது.

  1. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

உடல் பருமனான இருக்கும் ராசாத்தி என்ற பெண்ணின் கதையாக ஒளிபரப்பாக தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் 1,017 எபிசோடுகளுடன் நிறைவுக்கு வந்தது. இந்த சீரியலில் அஸ்வினி, புவி ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.