ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து யோகி பாபு வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Yogibabu twitter post video viral:

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் ஷான் இயக்கத்தில் உருவாகி இருந்த பொம்மை நாயகி திரைப்படம் அண்மையில் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகர் யோகி பாபு தனது சமூக வலைதள பக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது கடலூரில் ரசிகர்களால் நெகிழ்ந்து போன வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அத்துடன் அவர், பொம்மை நாயகியின் படப்பிடிப்பின் போது கடலூர் மக்களின் அன்பை நான் கண்ட நேரம், நன்றி கடலூர் மக்களுக்கு என தனது நன்றியையும் அப்பதிவில் குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.