தோனியுடன் கேக் வெட்டி மகிழ்ந்த யோகி பாபுவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் யோகி பாபு தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.தோனி அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக உருவாகி இருக்கும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ என்னும் திரைப்படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இருந்தது.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த தோனியுடன் இணைந்து எல்ஜிஎம் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது தீவிரமான கிரிக்கெட் பிரியரான யோகி பாபுவுக்கு தல தோனி அவர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் ஊட்டி விடும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.