
தமிழ் சினிமாவில் இன்றைய காமெடி நடிகர்களில் முன்னணி நடிகரான பல படங்களில் நடித்து வருபவர் யோகி பாபு. ஒவ்வொரு மாதமும் சுமார் 30 படங்கள் ஆரம்பமாகிறது என்றால் அதிக குறைந்தது 20 படங்களிலாவது யோகி பாபு நடிக்கின்றார்.
மேலும் தற்போது விஜயுடன் சர்கார் அஜித்துடன் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து வரும் யோகி பாபு சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் தெலுங்கு படத்தின் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சுமார் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள யோகி பாபுவுக்கு நாள் ஒன்றிற்கு ரூ 5 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு போயுள்ளது.
ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் யோகி பாபுவுக்கு அவ்வளவு சம்பளம் இருந்தாலும் இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.