Yogi Babu Request to Producers
Yogi Babu Request to Producers

என் போட்டோவை வைத்து ரசிகர்களை ஏமாத்தாதீங்க என தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார் யோகி பாபு.

Yogi Babu Request to Producers : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. அஜித், விஜய், ரஜினி, தனுஷ், சிம்பு என பெரும்பாலான தமிழ் நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் ஹீரோவாகம் தர்ம பிரபு, கூர்கா என சில படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளார்.

இப்படியான சிறிய பட்ஜெட் படங்கள் யோகி பாபு தான் ஹீரோ என்பது போல போஸ்டர் வெளியிட்டு படத்தின் வியாபாரத்தை முடித்துக் கொள்கின்றனர்.

விஜய் படத்தை பார்க்காமலேயே போறேன்.. பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தளபதி ரசிகர், காரணம் என்ன? – விஜய்க்கு குவியும் கோரிக்கை

யோகி பாபு இருக்கிறார் என நம்பி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் படம் பார்க்கச் செல்லும் ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

இதன் காரணமாக தற்போது யோகி பாபு வீடியோ ஒன்றில் நான் இரண்டு மூன்று காட்சிகளில் நடித்துள்ள பட தயாரிப்பாளர்கள் தயவு செய்து என்னைத் தனியாக போஸ்டரில் போட்டு படத்தை புரமோஷன் செய்யாதீர்கள்.

இதனால் விநியோகிஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் ஏமாந்து விடுகிறார்கள். எனக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. தயவு செய்து இனி இப்படி செய்யாதீர்கள் என மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.