Yashika Anand is in love with a famous actor
Yashika Anand is in love with a famous actor

நடிகை ஷாலினியின் தம்பி ரிசர்ட்டை பிரபல நடிகை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷாலினி. நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு முழுக்கு போட்ட இவருடைய தம்பி ரிச்சர்ட்டும் நடிகர் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் தற்போது பிரபல நடிகை யாஷிகா ஆனந்த்தை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதனை உறுதி செய்யும் விதமாக யாஷிகா தனக்கு முத்தமிடும் போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதேபோல் ரிச்சர்ட் மற்றும் யாஷிகா இருவரும் நெருக்கமாக இருக்கும் இன்னொரு போட்டோவும் இணையத்தில் பரவி வருகிறது.