கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்திருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல பெயரை தேடி கொடுத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனலில் தனக்கும் மஹத்துக்கும் இடையேயான காதலை பற்றி மஹாதின் காதலி பிராச்சி என்ன சொன்னார் என்பதை பற்றி யாஷிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஓபனாக கூறியுள்ளார்.

அதாவது பிராச்சி பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த சூழ்நிலையை நன்றாக புரிந்து கொண்டுள்ளார்.

அதனால் மஹத்தும் எனக்கும் இடையே ஏற்பட்ட காதலை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை, என்னிடம் சாதாரணமாக சகஜமாகவே பேசினார் என கூறியுள்ளார்.

மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது அனைத்தும் உண்மை. ஸ்கிரிப்ட் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியதை பற்றி கேட்டதற்கு பாலாஜி அண்ணா ஐஸ்வர்யாவின் அம்மாவை பற்றி தவறாக கூறினார். அதனால் அவரை பழி தீர்ப்பதற்காக தான் ஐஸ்வர்யா அப்படி செய்தார் எனவும் கூறியுள்ளார்.