யாஷிகா அழுகின்ற வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Yashika Anand in Crying Video : துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த் இந்தப் படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற ஒரு சில படங்களில் கவர்ச்சியாகவே நடித்திருந்தார். ஆனாலும் பிக் பாஸ் சீசன் 2 என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தான் யாஷிகாவிற்கு நிறைய ரசிகர்கள் உருவாகினர்.

கதறி கதறி அழும் யாஷிகா.. காரணம் என்ன? வைரலாகும் வீடியோ

அதன்பின் யாஷிகா ஆனந்த் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில். தனது நண்பர்களோடு காரை ஓட்டிச்சென்ற யாஷிகாவிற்கு விபத்து ஏற்பட்டது அதில் அவரின் இடுப்பு மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி இறந்துள்ளார். இந்தப் பிரச்சனையால் யாஷிகா மிகவும் பாதிக்கப்பட்டார்.

கதறி கதறி அழும் யாஷிகா.. காரணம் என்ன? வைரலாகும் வீடியோ

பின்பு அதிலிருந்து மீண்டு உடல்நலம் பெற்றபின் யாஷிகா ஆனந்த் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு இருக்கும் நிலையில் தற்போது அழுது கொண்டிருப்பது போல் காமெடியான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இதற்காக அவர் ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.