World Wrestling Championships 2018
World Wrestling Championships 2018

World Wrestling Championships 2018 – 2019-தில் மார்ச் மாதம் தொழில்முறை மல்யுத்த போட்டி (ரரஉ) வீரர்கள் சேர்வு நடைபெறும் என அதன் முன்னாள் உலக சாம்பியன் மேட் ஹார்டி கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் இபோட்டியை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஹார்டி, பத்திரிக்கையாளர்களை சென்னையில் சந்தித்தார்.

ஹார்டி கூறியது : இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தொழில்முறை மல்யுத்த போட்டி சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

இதன் மூலம் அவர்கள் சர்வதேச அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். மேலும், வாழ்வாதாரத்துக்கும் வழிவகுக்கும்.

ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் பங்கேற்றுள்ள மல்யுத்த வீரர்களும் இதில் பங்குபெற உள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில் இந்த போட்டிக்கான பெரிய சந்தையாக உருவாகி வருகிறது.

இந்திய வீரர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். ஏற்கெனவே மகளிர் பிரிவில் கவிதா தேவி கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ரிங்கு சிங், சௌரவ் குஜ்ஜார் போன்றோரும் பட்டியலில் உள்ளனர்.

தொழில்முறை மல்யுத்த போட்டியை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும் வரும் 2019-ஆம் ஆண்டு அபுதாபியில் நடக்கவுள்ள சிறப்பு குழந்தைகள் உலக ஒலிம்பிக் போட்டியை நாங்களும் இணைந்து நடத்த உள்ளோம். என்றார் ஹார்டி.