
World Boxing : டெல்லியில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது.
இதன் ‘லைட்வெயிட்‘ 48கிகி., பிரிவில் காலிறுதியில் இந்து முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், சீனாவின் வுயுவை எதிர் கொண்டார்.
முழு வீச்சில் செயல்பட்ட மேரி கோம் வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தார்.
மேரி கோம் 5-0 என வெற்றி பெற்றார். மற்றும் அரை இறுதியில் வட கொரியாவின் கிம் ஹியாங்கை எதிர் கொள்கிறார்.
மேலும், இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஹிப் போட்டியில் மோதி வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.
கோமின் 7-வது பதக்கம் :
அரையிறுதியில் நுழைந்த நிலையில் குறைந்தபட்ச பதக்கமான வெண்கல பதக்கம் நிச்சயம் ஆனது.
இதன் மூலம் மேரி கோம் உலக சாம்பியன்ஷிப்பில் 7-வது பதக்கம் வெல்ல இருக்கிறார்.
அரை இறுதியில் இந்திய வீராங்கனைகள் :
மேரி கோம் தொடர்ந்து மேலும் இந்திய போட்டியாளர்கள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
சோனியா,லாவ்லினா மற்றும் சிம்ரன்ஜித் என மோதம் 4 இந்திய வீராங்கனைகள் இந்தியா சார்பில் அரை இறுதிக்கு சென்று குறைந்தபட்ட பதக்கமான வெண்கல பதக்கத்தை உறுதி செய்து உள்ளனர்.