Women National Boxing Championship
Women National Boxing Championship

Women National Boxing Championship – மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டி கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. 54 கிலோ பிரிவில் மனிஷா மவுன் வெள்ளி வென்று உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 54 கிலோ எடை பிரிவில் இறுதி சுற்றில் மனிஷா மற்றும் தேவி இருவரும் மோதினர்.

சிறப்பாக விளையாடிய தேவி தன் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து, மனிஷா மவுன் அகில இந்திய போலீஸ் அணியின் மீனாக்குமாரி தேவியிடம் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கம் வென்றார். மற்றும் தேவி தங்கம் வென்றார்.

தொடரின் மற்றொரு விரிவான 68 கிலோ பிரிவில், அஸ்ஸாம் வீராங்கனை லவ்லினா போர்கோகெயின், தனது நேர்த்தியான விளையாட்டி தங்கம் வென்றார்.

இதனை தொடர்ந்து நடந்த 48 மற்றும் 69 கிலோ பிரிவு போட்டியில், பஞ்சாப் வீராங்கனைகள் மஞ்சு ராணி 48 கிலோ எடை பிரிவிலும், சிம்ரஞ்சித் கௌர் 69 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.