
தல அஜித்தின் தைரியத்தை பாராட்டி பேசியுள்ளார் நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ்.
சமீபத்தில் சென்னையில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு பேசி இருந்தனர். அதே போல் நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸும் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும் போது தல அஜித் தைரியமானவர். சினிமா விழா ஒன்றில் முதல்வர் கருணாநிதி முன்பே எங்களுக்கு அரசியல் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ள விருப்பமில்லை.
எங்களை கலந்து கொள்ளுமாறு அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள் என கூறினார். எல்லோரும் யோசித்து கை தட்டினார்கள். ஆனால் நான் தான் முதல் ஆளாக கை தட்டினேன் என கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய மூன்றாவது படத்திலேயே அஜித்துக்கு வில்லனாக நடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.