விடாமுயற்சி படத்தின் ஹீரோயின் யார்? ஷூட்டிங் எப்போது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவனது நடிப்பில் இறுதியாக வெளியான வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிப்பு வெளியானது, ஆனால் திடீரென்று விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மகிழ் திருமேனி அஜித்தை இயக்கும் வாய்ப்பை தட்டி தூக்கினார்.

இவர்கள் கூட்டணியில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் படத்தின் படப்பிடிப்புகள் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.