தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அரசியலுக்கு வர வேண்டும், மக்களுக்காக நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பது தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

விஜயும் அரசியலுக்கு வருவதற்காக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக ராதா ரவி மற்றும் சில நடிகர்கள் தாங்கள் அளித்த பேட்டிகளிலும் இதை கூறியுள்ளனர்.

இந்நிலையில் தாமிரபரணி புஷ்கரம் விழாவில் கலந்து கொண்டு புனித நீராடிய பின்பு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ சந்திரசேகர் நான் கிறிஸ்துவராக பிறந்திருந்தாலும் ஹிந்துவாக தான் வாழ்கிறேன்.

விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கு? மக்களால் உயர்ந்தவன் மக்களுக்காக பணியாற்றி வருகிறார் என கூறியுள்ளார்.