What I don't like is failure - Virat Kohli!
What I don't like is failure - Virat Kohli!

எல்லோரையும் போல, நானும் தோல்வியால் பாதிக்கப்படுவேன். உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது வேதனையாக இருந்தது,” என, இந்திய அணி கேப்டன் விராட் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட், தொடர்ந்து அதிக டெஸ்டில் (7) வென்ற இந்திய அணி கேப்டன், டெஸ்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை (86 இன்னிங்ஸ்) எட்டிய, உலகின் ‘நம்பர்-1’ கேப்டன் என சாதித்தவர்.

கடந்த உலக கோப்பை தொடர் அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது வேதனையாக இருந்தது. இந்த போட்டி துவங்கும் முன், கடினமான சூழ்நிலைகளை கடந்து அணியை எப்படியும் வெற்றிக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினேன். கடைசியில் இது நடக்காமல் போனது வருத்தமாக இருந்தது.

ஏனெனில் தோல்வி எனக்குப் பிடிக்காது. எல்லாம் முடிந்த பின், இப்படிச் செய்திருக்கலாமோ, அப்படிச் செய்திருக்கலாமோ என பேச விரும்ப மாட்டேன். ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும், அதை எனக்கு கிடைத்த பெருமையாக நினைப்பேன். போட்டி முடிந்து வெளியேறும் போது, என்னால் முடிந்தளவுக்கு தேசத்திற்காக அனைத்து சக்தியையும் தந்து விட்டு வர வேண்டும் என எண்ணுவேன்.

நாங்கள் விளையாடிய விதத்தை பார்த்து, அடுத்து வரும் தலைமுறையினர் வியக்க வேண்டும். அவர்களைப் போல நாமும் விளையாட வேண்டும் என எண்ண வேண்டும். அப்படித் தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். இவ்வாறு விராட் கூறினார்.