VRV Celebration

VRV Celebration : அஜித்திற்கு பிறகு சிம்புவுக்கு மட்டுமே மாஸான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ரசிகர்கள் பலரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் சிம்பு தனக்கு ரசிகர்கள் இல்லை என ஒரு சிலர் கிண்டலடித்ததால் தன்னுடைய கட் அவுட், பேனர்களுக்கு அண்டாவில் பாலபிஷேகம் செய்யுமாறு ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் தங்களது பாச வெறியை வெளிப்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சிம்பு ரசிகர்கள் நடுக்கடலிலும் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தின் பேனரை வைத்து அசத்தியுள்ளனர்.

இதற்கு முன்னதாக தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தான் இது போன்ற சம்பவம் முதல் முறையாக நடைபெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.