தனது காதலிக்க வைத்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் எழில்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகர் தான் விஜே விஷால்.

இவர் இதே விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கூட கலந்து கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறினார்.

இந்த நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் அவருடைய காதலி குறித்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால் விஜே விஷால் தன்னுடைய காதலி யார் என்று விஷயத்தை வெளிப்படையாக சொல்லாமல் நடிகை த்ரிஷாவை தான் காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

விஷாலின் பதிலை கேட்ட ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.