இயக்குனர் மற்றும் ஹீரோவாக களம் இறங்கிய வி.ஜே சித்து.. டைட்டில் வீடியோ இதோ.!!

வி.ஜே சித்து படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க உள்ளார்.

vj siddhu new project announcement
vj siddhu new project announcement

Youtube இல் Vj சித்து vlogs மூலம் பிரபலமானவர் வி.ஜே சித்து. இவரின் வீடியோக்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வி ஜே சித்து எழுதி,இயக்கி, நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்க உள்ளது.

தனது பேச்சுத் திறன் மூலம் சமூக வலைதளங்களில் தனித்துவமான இடத்தை பிடித்த VJசித்து இயக்குனராகவும் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இது குறித்து ஐசரி கே கணேஷ் பேசியபோது பிரதீப் ரங்கநாதன் ஆர்.ஜே பாலாஜி போன்ற அறிமுகம் இயக்குனர்களையும் நடிகர்களையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது வேல்ஸ் நிறுவனம் தான் அதேபோல் இப்போது விஜே சித்துவை அறிமுகப்படுத்துவது உற்சாகத்தை தருவதாகவும் கூறியுள்ளார்.

vj siddhu new project announcement
vj siddhu new project announcement

மேலும் வி.ஜே சித்து பேசும்போது.. சினிமா எப்போதும் எனது கனவு எப்போது எப்படி என்று தெரியவில்லை ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக அடையப்போகிறேன் என்று நம்பிக்கையோடு வந்தேன். Youtube காக வீடியோஸ் எடுக்குற இடத்திலிருந்து செட்டில் ஆக்ஷன் சொல்ற இடத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் டைட்டில் அனௌன்ஸ்மென்ட் வீடியோவை விஜே சித்து விளாக்ஸ் youtube சேனலில் வெளியிட்டு உள்ளனர் அதாவது இந்த படத்திற்கு டயங்கரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜே சித்து vlogs ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் தற்போது ஹீரோவாக வி ஜே சித்து எப்படி இயக்கப் போகிறார்? படம் எப்படி இருக்கப் போகும்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. விரைவில் இந்த படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.