78 குண்டுகள் முழங்கி காவல்துறை மரியாதையுடன் மண்ணுக்குள் மறைந்தார் விவேக்

Vivek Funeral : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் விவேக். இவர் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இவருடைய மறைவு திரையுலகிற்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாலை இவரது இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு மரியாதையுடன் மண்ணுக்குள் மறைந்தார் விவேக்.

அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவருடைய நினைவுகளும் அவர் ஆற்றிய செயல்களும் என்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.