Petta Vs Viswasam

Viswasam Vs Petta Release : பேட்ட படத்திற்கு முன்பாகவே விஸ்வாசம் படம் வெளியாக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

டி.இம்மான் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஸ்வாசம் வெளியாக உள்ள அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் ரிலீசாக இருப்பதால் எந்த படம் முதலில் வெளியாகும் என்ற குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தன.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி விஸ்வாசம் படத்தை நள்ளிரவு 1 மணி காட்சிக்கே ரிலீஸ் செய்ய படக்குழுவினர் அரசிடம் இருந்து அனுமதி வாங்கி இருப்பதாக அதிரடியான தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். எந்தெந்த தியேட்டர்களில் 1 மணி காட்சிகள் என்ற தகவல்கள் விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.