Viswasam Vijay fan review

Viswasam Vijay Fan Review : தலைவா நீ கிரேட் என விஸ்வாசம் படம் குறித்த விமர்சனத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து வெளியாகி இருந்த படம் விஸ்வாசம்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படத்தை KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் ரிலீஸ் செய்திருந்தது.

ரசிகர்கள் பலரும் படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவரும் அவரது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் தலைவா நீ கிரேட்.. கிளைமாக்ஸ்-ல அழ கூடாதுனு நினைச்ச என்னையே அழ வச்சிடீங்க. நீங்க நிச்சயம் தளபதியோட படம் பண்ணனும் என கூறியுள்ளார்.

விஸ்வாசம் படத்திற்கு எதிராகவே ட்வீட் செய்து வந்த ரசிகரின் இந்த விமர்சனம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.