Viswasam Updates

Viswasam Updates : விஸ்வாசம் படத்தின் முக்கிய அப்டேட் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதமாக இன்று நள்ளிரவில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். பொங்கலுக்கு அதிரடியாக வெளியாக உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா என மிக பெரிய நடிகர் நடிகைகள் பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க டி. இம்மான் இசையமைத்து வருகிறார்.

தற்போது இன்று நள்ளிரவு மூன்று மணி அளவில் படத்தின் ஒளிப்பதிவாளரான வெற்றி அசத்தலான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால் புனே நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அதே போல் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் ஆக்ஷன் அதாவது சண்டை காட்சிகளும் நிறைவடைந்து விட்டன. ஜென்டில் மேன் அஜித்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.