
தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் பல அப்டேட்களை அப்படத்தின் தயாரிப்பாளரான தியாகராஜன் அவர்கள் நேற்று நடந்த பில்லா பாண்டி இசை வெளியீட்டு விழாவில் வெளியிட்டுள்ளார்.
ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகனாக நடித்துள்ள பில்லா பாண்டி படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பில்லா பாண்டி படக்குழுவினர், விசுவாசம் படத்தின் தயாரிப்பாளர், விவேக், சீமான், கஸ்தூரி, கருணாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு இருந்தனர்.
இதில் தயாரிப்பாளர் தியாகராஜன் பேசிய போது, விஸ்வாசம் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இரண்டு பாடலுக்கு அஜித் சூப்பரா டான்ஸ் ஆடி இருக்காரு. ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு படம் உருவாகி இருக்கு என கூறியுள்ளார்.