Viswasam Update

Viswasam Update : விஜயின் கோட்டையான கேரளாவில் உள்ள தல ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் செகண்ட் போஸ்டருக்கு செய்த கொண்டாட்டங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

தளபதி விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவில் மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதே போல அஜித்திற்கு கர்நாடகாவில் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகிய விஸ்வாசம் செகண்ட் லுக் போஸ்டருக்கு கேரளாவை சேர்ந்த தல ரசிகர்கள் பேனர் தயார் செய்து அதற்கு யானையை கொண்டு பாலபிஷேகம் செய்துள்ளனர் செய்துள்ளனர்.

இந்த வீடியோ அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விஸ்வாசம் படத்தில் தல அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், விவேக், யோகி பாபு, ரமேஷ் திலக், கோவை சரளா என பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்து வருகிறார்.

விஸ்வாசம் படம் சொன்னபடி பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.