தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய விஸ்வாசம் பட தயாரிப்பாளர் தியாகராஜன் விஸ்வாசம் படம் ரொம்ப நல்லா வந்து இருக்கு. ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கும்.
இந்த படத்துல இரண்டு பாடலுக்கு தல அஜித் சூப்பரா டான்ஸ் ஆடி இருக்காரு, இதனால் இனி அஜித்துக்கு டான்ஸ் ஆட வராது என கூற முடியாது எனவும் கூறியுள்ளார்.