Viswasam Trailer Records

Viswasam Trailer Records : 24 மணி நேரம் முடிவதற்கு உள்ளாகவே விஸ்வாசம் ட்ரைலர் என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரன் தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டி. இம்மான் இசையமைத்துள்ளார். படகில் நயன்தாராம் தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பல காமெடி நடிகர் நடிகைகள் ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர்.

நேற்று மதியம் 1.30 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த ட்ரைலர் தற்போது வரை 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் ட்ரைலர் 1 மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது. இதனை தல ரசிகர்கள் அனைவரும் #Fastest1CroreViswasamTrailer என்ற ஹேஸ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here