Thala Vs Thalaivar Pongal

Viswasam Trailer Record : ட்ரைலர் ரிலீசுக்கு முன்பே பேட்ட படத்தின் சாதனையை முறியடித்து பின்னுக்கு தள்ளியுள்ளது விஸ்வாசம் படக்குழு.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தல அஜித்தின் விஸ்வாசம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்ககள் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ல் மோதி கொள்ள உள்ளன.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான பேட்ட படத்தின் ட்ரைலர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அதே போல் இன்று விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபல இணையதள பக்கமான IMDB-யில் 2019-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் விஸ்வாசம் படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

நேற்று வரை பேட்ட படம் முதலிடத்தை பிடித்து இருந்த நிலையில் இன்று விஸ்வாசம் படம் அதனை இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.

ட்ரைலர் ரிலீஸாவதற்கு முன்பாகவே விஸ்வாசம் இப்படியொரு சாதனையை படைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Petta Trailer Record

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.