Viswasam Trailer

Viswasam Trailer Reaction : விஸ்வாசம் ட்ரைலரில் தல அஜித் சன் பிக்ஸர்ஸ்க்கு பதிலடி கொடுத்துள்ள படி வசனம் அமைந்திருப்பதை ரசிகர்கள் சுட்டி காட்டி வருகின்றனர்.

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

அதே சமயம் பேட்ட பட வசனத்திற்கு விஸ்வாசம் படம் பதில் கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள பேட்ட படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்த ட்ரைலரில் பொண்டாட்டி புள்ள குட்டின்னு செண்டிமெண்ட் கிண்டிமெண்ட் இருந்தா அப்படியே ஓடி போய்ட்டு கொல வெறியில இருக்கேன் என்பது போல வசனம் விஸ்வாசத்தை எச்சரிப்பது போல அமைந்திருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஸ்வாசம் ட்ரைலர் இறுதியில் ஒரு வசனம் அமைந்துள்ளது.

பேரு தூக்கு துரை, பொண்டாட்டி பேர் நிரஞ்சனா, பொண்ணு பேர் ஸ்வேதா ஒண்டி ஒண்டி மோதி பாக்கலாம் வாடா என அஜித் கூறுகிறார்.

இதனை அஜித் ரசிகர்கள் ஹைலைட் செய்து சமூக வளையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.