Viswasam Trailer Celebration

Viswasam Trailer Celebration : விஸ்வாசம் ட்ரைலர் ரிலீஸ் ஆவதை கொண்டாட பிரபல தியேட்டர் நிருவாக ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டி. இம்மான் இசையமைத்துள்ளார்.

நாயகியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பலர் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் விஸ்வாசம் ட்ரைலரை கொண்டாட இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.