Viswasam Trailer

Viswasam Trailer : விஸ்வாசம் ட்ரைலர் குறித்த அப்டேட்டை படக்குழுவில் உள்ள பிரபலம் வெளியிட அது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இப்படத்தின் டீஸர் ட்ரைலருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். பேட்ட ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து தல ரசிகர்கள் வெறித்தனமாக விஸ்வாசம் ட்ரைலருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது எடிட்டர் ரூபன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் ட்ரைலர் ஆன் தி வே என பதிவிட்டு உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த பதிவில் கொல மாஸாக ட்ரைலர் இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருப்பது ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இதோ அந்த ட்வீட் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.