Viswasam Teaser Update

Viswasam Teaser Update : விஸ்வாசம் டீஸர் தேதி உறுதியாகி விட்டது என பிரபலம் ஒருவர் டீவ்வ்ட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ரசிகர்கள் பலரும் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் அல்லது டீஸர் ஏதாவது வெளியாகாதா என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பிரபலம் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பிரபலம் வேறு யாரும் இல்லை சென்சார் போர்டில் பணி புரியும் ஒருவரான உமைர் சாந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அந்த டீவீட்டில் அவர் கூறியுள்ளதாவது, விஸ்வாசம் டீசர் ரிலீசுக்கான நாள் உறுதியாகி விட்டது, விரைவில் டீஸர் வெளியாகும் என குறியிட்டுள்ளார்.