Viswasam Surprise

Viswasam Surprise : தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு மிக பெரிய சர்ப்ரைஸ் காத்து கொண்டிருப்பதாக அஜித்துடன் டேன்ஸ் ஆடிய பிரபலங்கள் கூறியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தில் அடிச்சு தூக்கு பாடலில் டேன்ஸ் ஆடிய இளைஞர்கள் பேட்டி கொடுத்துள்ளனர்.

அவர்கள் இந்த பாடலில் தல அஜித் இறுதியில் சோலோவாக டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.