Viswasam Story

Viswasam Story : விஸ்வாசம் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் தல ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகி உள்ளனர்.

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார். நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா, அனிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் அஜித் யாருக்கும் அடங்காத அலப்பறை கொடுத்து வரும் தாதாவாக நடித்துள்ளாராம்.

இதனால் அவரது குடும்பத்தினர் கால் கட்டு ( கல்யாணம் ) ஒன்னு போட்டா எல்லாம் சரியா போயிடும் என பெண் தேட தொடங்குகின்றனர்.

ரவுடி என்பதால் பலரும் பெண் கொடுக்க தயங்குகின்றனர். இதனால் அஜித் நல்லவர், வல்லவர் என ஓவர் பில்டப் கொடுத்து பக்கத்துக்கு ஊரை சேர்ந்த நயன்தாராவை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

கல்யாணதிற்கு பிறகு அஜித் ஒரு தாதா என தெரிய வர நயன்தாரா அஜித்தை விட்டு பிரிந்து வாழ தொடங்குகிறார். தனக்காக ஒரு சொந்த பிசினஸ் ஒன்றை கவனிக்க தொடங்குகிறார்.

இப்படியே காலம் ஓட ஒரு நாள் நயன்தாராவின் பிசினஸில் பெரிய பிரச்சனை ஒன்று உருவெடுக்கிறது. இதில் இருந்து அஜித் நயன்தாராவை எப்படி காப்பாற்றுகிறார்? அவருடன் எப்படி சேருகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது.

படம் முழுவதும் நயன்தாரா அஜித் செம கியூட்டான ஜோடியாக இருப்பார்கள் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் இவர்கள் பிரிந்து வாழும் கணவன் மனைவியாக நடித்திருப்பதாக வெளியான தகவல் கொஞ்சம் அப்செட்டாக்கியுள்ளது.

இருந்தாலும் இப்படத்தின் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது நிச்சயம் பக்கா கிராமத்து குடும்ப படமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.