
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படம் வரும் பொங்கலுக்கு மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. ரசிகர்களும் தல பொங்கலை கொண்டாடுவதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது தல அஜித்தின் விஸ்வாசம் கெட்டப் புகைப்படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.