Viswasam Single Track

Viswasam Single Track : விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் குறித்த தகவல்களை இப்படத்தின் பேக் கிரௌண்ட் மியூசிக் குறித்த அதிரடியான தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

தல அஜித் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இம்மான் இசையமைத்துள்ளார்.

தம்பி ராமையா அஜித்தின் தாய் மாமாவாக நடித்துள்ளார். ரோபோ ஷங்கர், விவேக், யோகி பாபு, ரமேஷ் திலக், இம்மான் அண்ணாச்சி, கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் சிங்கிள் டிராக் குறித்து பாடலாசிரியர் விவேகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த டீவீட்டில் விஸ்வாசம் படத்தில் சூப்பரான மெலடி பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. அது மனதை வருடும் அளவிற்கு இருக்கும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விஸ்வாசம் படத்தின் பின்னணி இசையும் மிக அற்புதமாக வந்திருப்பதாகவும் தன்னுடைய டீவீட்டில் கூறியுள்ளார்.