
Viswasam Single Track Update : விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் குறித்த தகவல்கள் லீக்காகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் விஸ்வாசம். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடித்து பொங்கல் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கொண்டாட வைத்திருந்தது.
இந்த கொண்டாட்டத்தை தொடர்ந்து தல ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டமும் காத்திருக்கின்றது. அது என்ன என்றால் இந்த படத்தின் சிங்கிள் டிராக் தான்.
ஆம், விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வரும் டிசம்பர் 5-ம் தேதிக்குள் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் அல்லது மோஷன் போஸ்டரை போல் சத்தமில்லாமல் வெளியாகி சாதனை படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.