
Viswasam Track :
தல ரசிகர்களுக்கு இன்று செம கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது நிச்சயம் ரசிககர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், விவேக், யோகி பாபு ஆகியோருடன் சேர்ந்து விஸ்வாசம் படத்தில் படத்தில் நடித்துள்ளார்.
சாத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.
ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகலாம் என நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் தல ரசிகர்களுக்கு இன்று செம கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனால் இதுவும் மோஷன் போஸ்டரை போலவே சத்தமில்லாமல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.