தல அஜித்

தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் டி.இம்மான் இசையமைத்து வருகிறார். தல அஜித் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா நாயாகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் பேட்ட பட ரிலீசால் தள்ளி போவதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தல ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #விஸ்வாசம்திருவிழா என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த பொங்கல் தல பொங்கலாக தான் இருக்கும் என மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.