Viswasam Promo

Viswasam Promo : விஸ்வாசம் பட டீம் அடுத்த அதிரடியில் இறங்கி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவி கைப்பற்றி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து தற்போது இந்த டிவி சேனலில் விஸ்வாசம் படத்திற்காக ப்ரோமோஷன்கள் தொடங்கபட்டுள்ளன.

அதற்காக சன் டிவியில் ப்ரோமோ வீடியோ ஒன்று ஒளிபரப்பட்டுள்ளது. இதனை தல ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ட்விட்டர் பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.