Viswasam producer
Viswasam producer

Viswasam producer – நடிகர் தனுஷ் தற்சமயம் ஒரேநேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படமும் ஒன்று.

கொடி படத்தை தொடர்ந்து இவர்கள் இணைவதால் இப்படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அதேபோல் கொடி படத்தை போலவே இப்படத்திலும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் ஷெட்யூல் தற்போது குற்றாலத்தில் நிறைவுக்கு வந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இப்படத்தை தயாரித்துவரும் சத்யஜோதி நிறுவனம் இதை அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு விஸ்வாசம் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்த இந்நிறுவனம் அடுத்த ஆட்டத்துக்கு தற்போது தயாராகி வருகிறது.

அப்பா – தந்தை என இரண்டு தனுஷில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.