Viswasam Next Update
Viswasam Next Update

Viswasam Next Update – பிப்ரவரி 1ம் தேதி மீண்டும் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

தல அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தமிழ் மொழியில் மட்டுமே வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 125 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து வருகிறது.

இதனால் தல ரசிகர்கள் தொடர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த கொண்டாட்டத்தை மேலும் நீடிக்கும் விதமாக சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், வரும் பிப்ரவரி 1ம் தேதி தெலுங்குவில் விஸ்வாசம் திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழில் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்து வருவதால் தெலுங்குவில் இப்படத்தை வாங்க விநியோகிஸ்தர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.