Viswasam Nayanthara

Viswasam Nayanthara : விஸ்வாசம் படம் பார்க்க தியேட்டருக்கு வரும் அஜித் ரசிகர்களுக்கு நயன்தாரா எக்ஸ்ட்ரா ட்ரீட் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தற்போது தல அஜித்துடன் சேர்ந்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

இதே நிறுவனம் தான் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஐரா என்ற படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீஸர் நேற்று யூ ட்யூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனையடுத்து வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் விஸ்வாசம் படத்தை திரையிட உள்ள தியேட்டர்களில் ஐரா படத்தின் டீசரை ஒளிபரப்ப படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.