Viswasam

Viswasam Nayanthara : படக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தை பார்க்க மறுத்துள்ளார் நயன்தாரா. அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, விவேக், ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக். தம்பி ராமையா, கோவை சரளா என பலர் இணைந்து நடித்துள்ள படம் விஸ்வாசம்.

டி. இம்மான் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது.

ரசிகர்கள் பலரும் மிகவும் ஆவலுடன் இந்த படத்திற்கான கொண்டாட்டங்களை தொடங்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் பிரிவியூ காட்சிகளை அஜித், ஷாலினி, தயாரிப்பாளர் தியாகராஜன் உட்பட படக்குழுவினர் பலரும் பார்த்து ரசித்திருந்தனர்.

இந்த பிரிவியூ காட்சிக்கு நயன்தாராவிற்கு அழைப்பு கொடுத்ததும் அவர் இதனை நிராகரித்துள்ளார்.

அதற்கான காரணம் படத்தை முன் கூட்டியே பார்ப்பதை விட மக்களுடன் மக்களாக சேர்ந்து தியேட்டரில் பார்க்க ஆசைப்பட்டு தான் இப்படி செய்ததாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.