
Viswasam JukeBox : விஸ்வாசம் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகின்றன. இதனால் தல ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர்.
தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடல் உரிமையை பெற்றிருந்த லஹரி மியூசிக் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
பெரும்பாலும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றன. இதுவரை இப்பாடல்கள் அடங்கிய ஆல்பம் யூ ட்யூபில் 7.5 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளன.
105K லைக்ஸைகளையும் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் 6.9K டிஸ் லைக்குகளை பெற்றுள்ளது. பாடல்களை பட்டய கிளப்பி வந்தாலும் 6,000-க்கும் அதிகமாக டிஸ்லைக் கிடைத்திருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாடல்கள் தல அஜித் ரசிகர்களை தாண்டி தளபதி விஜய், தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்களையும் விஸ்வாசம் பாடல் கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
