
Viswasam Intro Song : விஸ்வாசம் படத்தின் இன்ட்ரோ பாடல் குறித்த அப்டேட்டை பிரபல டேன்ஸ் மாஸ்டரான அசோக் ராஜா வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தல பொங்கலை கொண்டாட ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதே சமயம் விஸ்வாசம் அப்டேட் கிடைக்காதா எனவும் ரசிகர்கள் ஏங்கி வரும் இந்த நேரத்தில் விஸ்வாசம் படத்தில் இன்ட்ரோ பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ள அசோக் ராஜா மாஸ்டர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் இன்ட்ரோ பாடல் வேட்டி கட்டு பாடல் என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் இந்த பாடல் செம மாஸாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
சிறியவர்கள் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு ஆட்டம் போடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும் நிச்சயம் இந்த வருட பொங்கல் ஒட்டு ரசிகர்களுக்கும் தல பொங்கலாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.