Viswaasam Hindi RItes

Viswasam Hindi : தல அஜித்தின் விஸ்வாசம் பட வியாபாரம் தமிழ் சினிமாவை மட்டுமில்ல பாலிவுட் சினிமாவையே மிரள வைத்துள்ளது.

தல அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு வெளியாக இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தின் உரிமையை வாங்கி இருந்தது. இதனையடுத்து தற்போது வட இந்தியாவிலும் இப்படத்தின் தியேட்டர் உரிமை விற்று தீர்ந்துள்ளது.

கணேஷ் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த படத்தின் மிக பெரிய தொகை கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிறுவனம் விஸ்வாசம் பட உரிமையை கைப்பற்றி இருப்பதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.