Viswasam Celebration

Viswasam Celebration : சூப்பர் ஸ்டாரின் 2.ஓ படத்தின் இடைவேளையில் தூக்கு துரை மாஸ் காட்டியுள்ளார். இதனை தல ரசிகர்கள் ஆட்டம் போட்டு கொண்டாடியுள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்திருந்த 2.ஓ படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ளது.

லைகா ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக மிக பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்த படத்தின் இடைவேளை நேரத்தில் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவை தல ரசிகர்கள் தற்போது சமூக வளையதள பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

தல அஜித்தின் இந்த விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ :